வதந்திகளுக்கு சாய் பல்லவி முற்றுப்புள்ளி – சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன் என பதிவு: சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையான சாய் பல்லவி. படங்களில் கதைக்கு, திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் இவர் இதுவரை கவர்ச்சி துளிகூட காட்டியதில்லை.
முதன்முறையாக பாலிவுட்டில் சாய் பல்லவி நடிக்க உள்ள ராமாயணம் படத்தில் சீதையாக நடிக்கிறார். இந்த படம் பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது
சாய் பல்லவி எச்சரிக்கை
சாய் பல்லவி குறித்து சமீபத்தில் ஒரு வதந்தி பரவியது. ராமாயணம் திரைப்படத்தில் சீதையாக நடிக்க இருப்பதால் , சாய் பல்லவி அசைவ உணவை நிறுத்தி சைவமாக மாறிவிட்டார் என்று ஒரு வதந்தி பரவியது.
வெளியூர் சென்றால் கூட சமையற்காரரை அழைத்துச் செல்வதாகவும், ஹோட்டல்களில் கூட உணவருந்துவதில்லை எனவும் கூறப்பட்டது. இதை அறிந்த ரசிகர்கள், “சாய் பல்லவி இப்படி மாறிட்டாங்களே!” என பேச ஆரம்பித்தனர்.
இந்நிலையில், சாய் பல்லவி தனது ட்விட்டர் பக்கத்தில் இது போன்ற வதந்திகளுக்கு விளக்கமளித்துள்ளார். x தளத்தில் சாய் பல்லவி குறிப்பிட்டது : “வதந்திகள் மற்றும் பொய்களைக் கவனித்தபோதெல்லாம் நான் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தேன். உண்மை எது என்பதை கடவுள் அறிவார்.
ஆனால், இந்த வதந்திகள் தொடர்ந்து பரவுவது வேதனையானது. எனவே, இப்போது எதிர்வினையாற்றும் நேரம் வந்துவிட்டது. குறிப்பாக, எனது படங்கள் வெளியீட்டுக்கு முன்போ, முக்கிய அறிவிப்புகளின் போது இத்தகைய தகவல்கள் பரவுகின்றன.
அடுத்த முறையிலிருந்து, இத்தகைய வதந்திகள் மீண்டும் ஏற்பட்டால், நான் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்” என்று அவர் உறுதியுடன் தெரிவித்தார்.